பிக் பாஸ் வீட்டை விட்டு வெளி ஏறுகிறாரா கவின் ?

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கவின், சாண்டி, தர்ஷன், முகேன், ஷெரின், லாஸ்லியா ஆகிய 6 போட்டியாளர்கள் உள்ளனர். முகேன் நேரடியாக இறுதியாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், மற்ற 5 பேர்களுக்கிடையே கடுமையான போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், இறுதி போட்டியில் வென்றால் ரூ.50 லட்சம் பெறலாம். ஆனால், தற்போது ரூ. 5 லட்சம் எடுத்துக் கொண்டே தற்போதே வீட்டை விட்டு வெளியேறலாம் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதைக் கேட்ட கவின் பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல எழுந்து நிற்கும் புரமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அனேகமாக கவின் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குடும்ப பிரச்சனையில் இருக்கும் கவின், தனக்கு தேவையான பணம் கிடைத்து விட்டால் வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.