பிரசாந்தை வைத்து இயக்கவிருக்கும் மோகன் ராஜா !

தேசிய விருது பெற்ற ஹிந்தி படம் அந்தாதூன், இப்படத்தை ஸ்ரீராம் இயக்கத்தில் ஆயுஷ்மான், குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியயோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. பிரஷாந்த் நடிக்க அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படத்தை மோகன் ராஜா இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் தனது தம்பியை வைத்து மோகன் ராஜா இயக்கிய ரீமேக் படங்களை வெற்றியடைந்ததை அடுத்து இப்படத்தை இவரே இயக்கினால் சரியாக இருக்குமென பிரஷாந்த்தும் அவரது தந்தையும் கருதுகின்றனர். மோகன் ராஜாவும் இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.