பிரபலங்களை கவர்ந்த ‘அருவி’.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அண்மையில் வெளியான படம் ‘அருவி’ . இப்படத்தைப் பற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

‘‘படத்தில் என்னையும் எனது நிகழ்ச்சியையும் கிண்டல் செய்தாலும் ‘அருவி’ நல்ல படம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் அருவி படம் “பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்த படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிராக எதுவும் செய்ய வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார் என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

மற்றும் இப்படம் குறித்து, நடிகர் கார்த்தி “தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக இருப்பதனாலோ என்னவோ ‘அருவி’ படம் எனக்குள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமூகத்திற்கான சாட்டையடி கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இயக்குநர், படத்தை நல்ல என்டர்டெயினராகவும் நகர்த்தியிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அதிதியின் அர்ப்பணிப்பு அற்புதம். படத்தின் காட்சியமைப்புகள், இசை என அனைத்துமே ஒரு புதிய அனுபவத்தை தந்தது” என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார்”