பிரபல இயக்குனரை கிண்டல் செய்ய தொடங்கிய ரசிகர்கள்!

பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் பெயர் பெற்றவர் . இவர் இயக்கிய  பிரமாண்ட ஹிட் அடித்த படம் “கத்தி”. இப்படத்தின் கதை என்னுடையது என சில வருடங்கள் முன் ஒருவர் பேட்டிக்கொடுத்தார், அப்போது எல்லோரும் அவரை கிண்டலாக பேசினார்கள். இந்நிலையில் திரையரங்கில் வெற்றி நடைப்போடும் “அறம்” படத்தை இயக்கிய வேறு யாருமில்லை கத்தி என்னுடைய கதை என்று சொன்ன கோபி தான். இதனால் பலரும் தற்போது முருகதாஸின் கடைசி இரண்டு படங்களுமே தோல்வி, ஆனால், கோபி வெற்றி பெற்றுவிட்டார் என  இருவரையும் ஒப்பிட்டு  ஏ.ஆர் முருகதாஸை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.