பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது!

சின்ன திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்பு வெள்ளித்திரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அறிமுகமாகமானார். இப்படத்தின் மூலம் நிறைய படங்களில் நடித்துவந்தார். கடைசியாக இவர் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். சமீபத்தில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று பெரியவர்கள் முன்னிலையில் தனது மாமா மோசஸ் ஜோயளை திருமண செய்துகொண்டார். மதுமிதாவின் தந்தை வண்ணை கோவிந்தன் அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர். இவர்களுடைய திருமணத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.