Cine Bits
பிரபல தொகுப்பாளினியை டிக் அடித்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கும் படங்களை போல அவர் தயாரிக்கும் படங்கள் நல்ல தரமான படமாக இருக்கும் என்பது ரசிகர்களை நம்பிக்கையாக கருதப்படுகிறது. அந்தவகையில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத் தலைவன் என்ற படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். அரசியல் ரீதியான பல கருத்துக்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நாயகனாக பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாட்களாக துணைக் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த ரம்யாவுக்கு வெற்றிமாறன் சங்கத் தலைவன் படத்தின் மூலம் ஹீரோயினாக வாய்ப்பு அளித்துள்ளார். இதனாலேயே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.