பிரபல நடிகை வினோதினி கணவருக்கு விபத்து: மருத்துவமனையில் அனுமதி!

பிரசாந்த் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் தமிழில் வெளியான ‘வண்ண வண்ண பூக்கள் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. இவர் திரைப்படங்களை தாண்டி ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். வினோதியின் கணவர் பெயர் வெங்கட் ஸ்ரீதர். இவர் ஒரு கட்டிட காண்ட்டிராக்டர். வெங்கட் ஸ்ரீதர், நேற்று திருவான்மியூரில் இருந்து மெரினா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது வாகனம் முன்னால் சென்ற ஒரு வண்டி மீது மோதியிருக்கிறது. அதில் இருவருக்குமே காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரீதருக்கு வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.