பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் மரணம்: திரையுலகினர் இரங்கல்

பிரபல நடிகரும், நாடக ஆசிரியருமான கிரிஷ் கர்னாட் இன்று காலமானார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கிரிஷ் கர்னாட். பிரபல எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், திரைப்பட இயக்குநர் என்று பல்வேறு திறமைகள் கொண்டவர் அவர். கிரிஷ் கர்னாட் தனது குடும்பத்தாருடன் பெங்களூரில் வசித்து வந்தார். 81 வயதான கிரிஷ் கர்னாட் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவருக்கு ரகு கர்னாட் என்கிற மகனும், ஷல்மலி ராதா என்கிற மகளும் உள்ளனர். ஷங்கரின் காதலன் படத்தில் பிரபுதேவா, நக்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வில்லத்தனம் செய்த அப்பாவாக நடித்தவர் கிரிஷ் கர்னாட். சூர்யாவின் 24 தான் அவர் நடித்த கடைசி தமிழ் படமாகும். சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹை படத்தில் ரா அதிகாரியாக நடித்திருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் அவர். அவரின் மறைவு செய்தி அறிந்து திரையுலக பிரபலங்களும், எழுத்தாளர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.