பிரபல நிகழ்ச்சியில் கண்கலங்கியா அனிருத்! எதற்கு தெரியுமா?

அனிருத் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இன்று இவர்  இளம் ரசிகர்கள் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நாயகனாக திகழ்கிறார். ஒய் திஸ் கொலவெறி, ஆலுமா டோலுமா என பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தற்போது அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சர்வைவா, தலை விடுதலை, காதலாடா என பாடல்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டது. பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி நடத்தும் அன்புடன் டிடி நிகழ்ச்சியில் இந்தவார ஸ்பெஷல் கெஸ்டாக அனிருத் கலந்துகொள்கிறார். பிரமோ கிளிப்பில் சர்வைவா, தலை விடுதலை பாடலை கேட்டுவிட்டு அஜித் தனக்கு போன் கால் செய்து “i am so proud to work with u” என சொன்னாராம். இதனால் சற்று அதிர்ச்சியாகி அனிருத் கண்கலங்கி விட்டாராம். நான் ஒரு அஜித் ஃபேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார் அனிருத்.