Cine Bits
பிரபாஸின் சகோவில் இணைந்த அனிருத் !
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி உள்ள திரைப்படம் 'சாஹூ'. பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின், பிரபாஸ் இந்த படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'காதல் சைக்கோ' என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தனிஷ்க் இசையில் உருவான இந்த பாடலை அனிருத், துவனி பனுஷாலி மற்றும் தனிஷ்க் ஆகியோர் பாடியுள்ளனர். மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார். இதே பாடலின் தெலுங்கு பதிப்பிலும் அனிருத் பாடியுள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் பாடகராக அனிருத் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.