பிரபாஸுக்கு அமெரிக்க தொழிலதிபர் மகளுடன் திருமணம் – பிறந்தநாளில் அறிவிப்பு !

பாகுபலி, சாஹோ ஆகிய திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரபாஸ். 40 வயதை எட்டியுள்ள பிரபாஸ் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். நடிகை அணுஷ்காவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரின் திருமணம் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் 23-ம் நடிகர் பிரபாஸ் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.