பிரபாஸுக்கு வில்லனாக நடித்த அருண் விஜய் !

தடம் படத்தின் ஹீரோ அருண் விஜய், பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.  நடிகர் பிரபாஸ், ‘சாஹோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் வில்லனாக நடிகர் அருண்விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.