பிரமாண்ட எல்.இ.டி கட் அவுட்டில் மின்னும் அஜித்தின் விஸ்வாசம் !

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஸ்வாசம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர்களும், கட் அவுட்களும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் அஜித்திற்கு “எல்.இ.டி” கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி வருமாறு இடம்பெற்றுள்ளன. இதுபோன்று எல்.இ.டியில் ஒளிரும் வகையில் டிஜிட்டல் கட் அவுட் வைப்பது சினிமா வரலாற்றில் முதல் முறை என்று கூறப்படுகிறது.