பிராங்க் கால் தீனா ஹீரோ

நடிகர் தனுஷ் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாகி இருந்த சிவகார்த்திகேயனை தன்னுடன் 3 படங்களில் இணைத்து நடிக்க வைத்து நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தார். இதை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் “பிராங்க் கால்” மூலம் பிரபலமான தீனாவை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். இந்த படம் மலையாளத்தில் கடந்த 2016 ஆண்டு வெளியான 'கட்டப்பனையில் ரித்விக் ரோஷன் 'என்ற படத்தின் ரீமேக்காக உருவாக்க  இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய நாதிர்ஷா என்பவர் இயக்கவுள்ளார். இதில்  விவேக் தனுஷுடன் இருக்கும் நட்பினால் தீனாவிற்கு தந்தையாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தலைப்பு “அஜித் ப்ரம் அரும்புக்கோட்டை ” என வைக்கலாம் என்றும், இந்த படத்தின் காமெடியனாக தர்மஜன் போல்காட்டி என்பவர் தமிழ் ரீமேக்கிலும் அதே கேரக்டரில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.