பிரான்சில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா

நடிகர் ஆர்யா ஒரு சைக்கிளிங் ஆர்வலர். ஆர்யா பல இடங்களுக்கு சைக்கிளில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரும் நடிகர் சந்தானமும் ஞாயிறு தோறும் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை சைக்கிளிலேயே சென்று திரும்புவது வழக்கம். நடிகர் சங்க தேர்தலின் போது கூட நடிகர் ஆர்யா தனது வாக்கினை பதிவு செய்வதற்காக சைக்கிளில் தான் வந்தார். தனது ரசிகர்களையும் டுவிட்டர் மூலமாக சைக்கிளிங் செய்ய ஊக்குவித்து வருகிறார். அவர் சைக்கிள் ரைடராக பல தேசிய சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் நாட்டில் ஒரு நீண்ட தூர சைக்கிள் போட்டி நடக்க இருக்கிறது. இப்போட்டியில் பாரிஸ் பிரெஸ்ட் பாரிஸ் எனும் மாபெரும் சைக்கிள் போட்டியில் 1200 கிலோமீட்டர் தூரத்தை ஒரு அணியாக கடக்க வேண்டும். இம்மாதம் நடைபெறும் இப்போட்டியில் ஆர்யாவின் அணி கலந்து கொள்ள இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ந்தேதி வரை நடைபெறும் இந்த சைக்கிள் போட்டியில் சுமார் 6 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.