பிரியங்கா சோப்ராவிற்கு யுனிசெஃப் அமைப்பின் ‘டேனி கே’ மனிதாபிமானத்திற்கான விருது !

பாலிவுட் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. திரைப்படங்களில் நடிப்பதும் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் குறித்த செயல்பாடுகளில் 18 ஆண்டுகளாகத் தன்னை ஈடுபடுத்தி வருபவர். தன் செயல்பாடுகள் மூலம் யுனிசெஃப் நிறுவனத்தின், குழந்தைகளுக்கான நல்லெண்ணத் தூதராக 2006-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் உலகெங்கும் உள்ள பல நாடுகளுக்குச் சென்று, அந்நாட்டில் குழந்தைகளின் கல்வி, பொருளாதார நிலை, அவர்களின் வாழ்வியல் முறைகள் போன்றவற்றை உலகறியச் செய்தார். எங்கேனும் உதவிகள் தேவைப்படும் நாடுகளின் நிலை இருந்தால் ஐ.நாவுக்குத் தெரியப்படுத்தி, அதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்திவந்தார். இந்த நிலையில், யுனிசெஃப் அமைப்பின் 'டேனி கே' மனிதாபிமானத்துக்கான விருது பிரியங்கா சோப்ராவுக்கு நேற்று (4.12.2019) வழங்கப்பட்டுள்ளது. விருது குறித்து அவர் பேசும்போது, நான் விருதுக்காகச் செயல்பட்டது இல்லை. ஆனால், இந்த விருது இப்போது என் கையில் இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. மனிதாபிமான விருதை நான் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். என்னை நம்பி அவர்களின் துயரங்களைப் பகிர்ந்த எல்லாக் குழந்தைகளின் முகமும், அவர்களின் வறுமையும்தான் இப்போது என் கண்முன் வந்துபோகிறது.