பிரியங்கா சோப்ரா வாங்கும் புதிய வீட்டின் மதிப்பு !

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனசை கடந்த வருடம் திருமணம் செய்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறினார். இது நிக் ஜோனசுக்கு சொந்தமான வீடு. இதன் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். இந்த வீடு ஐந்து படுக்கை அறைகள், ஐந்து குளியல் அறைகள், ஒரு நீச்சல் குளம், இரவு விருந்து நிகழ்ச்சிக்கு தனி பகுதி என்று விசாலமாக இருந்தது. இப்போது அந்த வீட்டை விற்றுவிட்டனர். இதுவே பெரிய வீடுதான். ஆனாலும் இதை விட பெரிய வீட்டுக்கு மாறுவதற்காக விற்று இருக்கிறார்கள். அதே பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இன்னொரு புதிய வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்து இருப்பதாக ஹாலிவுட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. புதிய வீட்டின் மதிப்பு ரூ.140 கோடி என்று கூறப்படுகிறது.