பிரியா பவானி ஷங்கரின் நியூ லுக் !

சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். அவர் சின்னத்திரை பிரபலமாக இருந்தபோதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ப்ரியா பவானி சங்கர் எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து நடித்த மான்ஸ்டர் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அந்த மகிழ்ச்சியில் உள்ளார் ப்ரியா. தற்போது ப்ரியாவின் கையில் 3 படங்கள் உள்ளன. தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல் தனக்கு எது செட்டாகுமோ அதை மட்டும் ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் மிகவும் அழகாக இருப்பதாக அவரை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.