பிரேக்கிங் நியூஸ் படத்தில் ஜெய்க்கு ஜோடியான பானுஸ்ரீ !

பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிரேக்கிங் நியூஸ் சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் ஒரு ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம். இது வெறுமனே கிராஃபிக்ஸ் வைத்து உருவாகும் படம் அல்ல, நல்ல எமோஷனை உள்ளடக்கிய படம், நல்ல கருத்துக்களையும் கொண்டுள்ளது என்றார். பானுஸ்ரீ ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், அடுத்ததாக சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த படத்திற்கு ஜானிலால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.