பிலிம்பேர் விழாவில் முதல் வரிசை டிக்கெட் விலை

இந்திய சினிமாவில் நிறைய விருது விழாக்கள் நடக்கும். இதில் சில விருது விழாக்கள் மற்றும் மிகவும் பிரபலம். சினிமா விருது விழாக்களில் மிகவும் பிரபலம் பிலிம்பேர் விருது. முன்னணி பிரபலங்கள் அமைவரும் கலந்துகொள்ளும் அந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும். இதை பயன்படுத்தி டிக்கெட் விலையை ஏற்றி விழா நடத்துபவர்கள் இதன் மூலம் கொள்ளை லாபம் பெறுவார்கள். இந்தியாவின் அணைத்து சினிமா பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார்கள். மும்பையில் நட்சத்திரங்கள் பங்குபெறும் பிலிம்பேர் விருது விழா இந்த வாரம் சனிக்கிழமை நடக்கவுள்ளது. அதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை 10 ஆயிரம் ருபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் வரிசை டிக்கெட் விலையை கேட்டால் உங்களுக்கு நிச்சயம் தலைசுற்றும். முதல் வரிசையில் அமர்ந்து பார்க்கவேண்டும் என்றால் 3 லட்சம் ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டுமாம். ஆனால் அந்த டிக்கெட் வாங்கவும் ஆள் இருக்கிறார்கள் என்பது தான்ஆச்சர்யம்!