பிளாஸ்டிக் விழிப்புணர்வில் சூர்யா!

தமிழக அரசுடன் கைகோத்து பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார் சூர்யா. ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. தற்போது பல கடைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், சில கடைகளில் இன்னும் உபயோகப்படுத்தப்பட்டுதான் வருகிறது. இதனால், பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல் அக்குறும்படம் அமைந்துள்ளது. 'மாறலாம், மாற்றலாம்' என்ற பெயரில் 2டி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் இந்தக் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக்குறும்படத்தை ஹரிஷ் இயக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.