பீகில் படத்தின் ட்ரைலரில் அமோக ஆதரவை பெற்ற ரோபோசங்கரின் மகள் !

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பீகில் பட ட்ரைலர் வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ட்ரைலர் அதிரடியாக இருந்தது. ஏ.ஆர். ரஹ்மானி பின்னணி இசையும், விஜயின் மாஸ் கட்சிகளும் பட்டய கிளப்பும் வசனங்கள் என நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக காட்டப்பட்டுள்ளது. அவரிடம் பயிற்சி பெரும் பெண்களுள் ஒருவராக நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா நடித்துள்ளார். ட்ரைலரில் எங்க அப்பாவும் குண்டு, அம்மாவும் குண்டு பின்ன நான் எப்படி இருப்பேன் என்கிற வசனம் மூலம் பலரையும் கவர்ந்துள்ளார். பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.