புகைபிடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வருத்தம் தெரிவித்த சந்தானம் !

சந்தானம் தற்போது ‘டகால்டி’ எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதை கண்டித்து சமூக ஆர்வலர்கள் சந்தானத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரை கண்டித்தனர். இதைத் தொடர்ந்து சந்தானம் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். நான் புகைப்பிடிப்பது போன்று உருவாக்கப்பட்டு இருந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டர் கவனக்குறைவாக வெளியிடப்பட்டு விட்டது. உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். இனிவரும் எனது அடுத்த படங்களில் இதுபோன்ற புகைப் பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் முதல் தோற்ற படங்கள் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு சந்தானம் கூறியுள்ளார்.