புதிய கல்விக்கொள்கையை விமர்சித்த தனக்கு ஆதரவளித்த உலகநாயகனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா !

நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களையும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களையும் சமதளத்தில் வைத்து பார்க்ககூடாது என்றும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்து சூர்யா வெளியிட்ட அறிக்கையில், தனது கருத்துக்களுக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக தங்களுக்கும் தங்களுடைய அமைப்புக்கும் நன்றிகள் எனக் கூறியுள்ளார். மேலும் தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.