புதிய கல்விக்கொள்கை தொடர்பான சூர்யாவின் கருத்துக்கு சத்யராஜ் ஆதரவு !

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ‘அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார். சூர்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் வந்தாலும், பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சூர்யாவிற்கு ஆதரவாக சத்யராஜும் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார் அதில் சமூக நீதிக்காக குரல் கொடுத்த சூர்யாவை பார்த்து பெருமைப்படுகிறேன். முன்னணி நடிகராக இருந்து கொண்டு சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்கும்போது பல்வேறு சங்கடங்கள் வரும். பல்வேறு சங்கடங்களையும் கடந்து சூர்யா குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என  அவர் கூறியுள்ளார்.