புதிய தொழிலில் களமிறங்கிய ஐஸ்வர்யா தனுஷ்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இதுவரை படம் இயக்குவது மற்றும் தயாரிப்பது போன்ற விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது Sarva Yoga Studio என்ற நிறுவனத்தில் ஐஸ்வர்யா தனுஷ் முதலீடு செய்துள்ளாராம். இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் யோகா பிட்நெஸ் மையங்கள் உள்ளன. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் இந்த நிறுவனத்தில் ஐஸ்வர்யா ஒரு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. மலைக்கா அரோரா, Jennifer Lopez, Alex Rodriguez, ஷாஹித் கபூர் போன்ற சினிமா நட்சத்திரங்களும் இந்த நிறுவனத்தின் பங்குதார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.