புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் – ரைசா ஜோடி!

கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் காதல் கலந்த காமெடி படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க ரைசா ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் சினிமாவில் பிசியான நடிகராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ், நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில்,
ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் ஜோடியாக jநடிக்கிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இந்த படத்தை ஆரா சினிமாஸ் சார்பில், மகேஷ்.ஜி தயாரிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.