புது பொண்ணுக்கே உண்டான பொலிவுடன்.. கழுத்தில் மஞ்சள் கயிறு தாலியுடன் சாயிஷா!

நடிகை சாய்ஷா வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பின்பு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இந்த நிலையில் கஜினிகாந்த் திரைப்படத்தில் ஆர்யாவுடன் நடித்த சாயிஷா காதல் வசப்பட்டு இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள் பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது, சமீபத்தில் ஹனிமூன் சென்ற இந்த தம்பதியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானது இந்நிலையில் கழுத்தில் மஞ்சள் கயிறு தாலியுடன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.