புஷ்பா புருஷன் யோகி பாபுவா !

சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும், உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. கூர்கா, தர்ம பிரபு, ஜாம்பி என அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் படங்களில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது தன்னுடன் நடித்த நடிகையுடன் யோகி பாபு காதலில் இருப்பதாக கிசுகிசுக்கபட்டு வருகிறார். அது வேறு யாரும் இல்லை புஷ்பா அக்கா தான். விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை இன்னும் யாராலும் மறந்திருக்க முடியாது என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி. ரேஷ்மா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி ‘ சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது யோகி பாபுவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக யோகி பாபு தனக்கு பெண் கிடைக்கவில்லை என புலம்பி வந்ததையடுத்து தற்போது ரேஷ்மாவையே திருமணம் செய்யும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.