பெண்கள் மொபைல் போனை கவனமாக பயன்படுத்தவேண்டும் – நிக்கி கல்ராணி !

கீ என்ற தலைப்பு கேட்டவுடன் பூட்டுக்கு தேவைப்படும் சாவி தான் நினைவிற்கு வந்தது. ஆனால், இயக்குனர் அந்த கீ இல்லை என்றார். நாம் எந்த செயல் செய்தாலும் அதில், நல்லதும் கெட்டதும் நடக்கும். கெட்டதிலும் நல்லது நடக்கும். அதுதான் கீக்கு அர்த்தம். நான் இந்த படத்தில் தியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நம் அன்றாட வாழ்வில் புதிய டெக்னாலஜியுடன் கூறிய மொபைல் போனை பயன்படுத்தி வருகிறோம். ஒரு ஹாக்கர் மூலம் நம்முடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படம். பெண்கள் மட்டும் இல்லை. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் எப்படி இருக்க வேண்டும் என நிக்கிகல்ராணி உரைத்துள்ளார்.