பெண்குழந்தைகள் நலனுக்கான நல்லெண்ண தூதராக செயல்படுபவர் அமிதாப் பச்சன் !

76 வயதான அமிதாப் பச்சனுக்கு ரூ.2 ஆயிரத்து 800 கோடி சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பதாக அமிதாப் பச்சன் விருப்பம் தெரிவித்து உள்ளார். அமிதாப் பச்சன் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், தனது சொத்துகளுக்கு மகன் அபிஷேக் மட்டும் உரிமை கோர முடியாது என்று கூறினார். ஏற்கனவே ஒரு தடவை தனது வலைத்தள பக்கத்தில், ‘நான் இறக்கும்போது, எனது சொத்துகளை மகன், மகளுக்கு சமமாக விட்டு செல்வேன்’ என்று கூறியிருந்தார். பாலின சமத்துவத்தை பற்றி அடிக்கடி பேசி வரும் அமிதாப்பச்சன் தனது மகள் மீதான அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். பெண் குழந்தைகள் நலனுக்கான ஐ.நா.சபை தூதராகவும் அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.