பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகை பானுப்பிரியா கைதாகிறாரா?

நடிகை பானுபிரியாவின் வீட்டில் பணிபுரியும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதுவரை அந்த சிறுமிக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும் பானுபிரியாவின் அண்ணனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார் என்றும் அந்த சிறுமியின் தாயார் ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்திவரும் வேலையில் நடிகை பானுபிரியா மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அந்திர டிஜிபிக்கு ஆந்திர குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு கடிதம் கொடுத்துள்ளனர். பிரச்சனை தீவிரமடையவே நடிகை கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.