பெண் வேடத்தில் யோகி பாபு – ஜாம்பி படப்பிடிப்பு முடிந்தது !
எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'ஜாம்பி'. ஒரு பாடல் தவிர படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. படத்தில் யோகிபாபு பெண் வேடத்திலும் சில காட்சிகளில் வருகிறார். அந்த புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். பிரேம்ஜி இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.