பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டும் சூர்யா !

அண்மையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராகவும் பேசியிருந்தார். இந்நிலையில் காப்பான் இசைவெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, பெரியாரின் கருத்தை நினைவு கூர்ந்து பேசினார். கோட்சே காந்தியை சுட்ட பின்னர் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது எல்லோரும் வன்முறையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது கேட்சேவின் அந்த துப்பாக்கியை எடுத்து சுக்குநூறாக உடைத்துவிடுங்கள் என பெரியார் சொன்னார். அப்போது அய்யா நாங்கள் கோட்சேவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் அவருடைய துப்பாக்கியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என அருகில் உள்ளவர்கள் கேட்டுள்ளார்கள். அதற்கு கோட்சே வெறும் துப்பாக்கி தான் என சாதாரணமாக சொன்னார்” என்று விழாவில் பேசினார். மேலும் ஒவ்வொரு நிகழ்வின் போது ஒரு சித்தாந்தம் இருப்பதாக காந்தி கொலை மூலம் பெரியார் சுட்டிக்காட்டிருப்பதாக சூர்யா தெரிவித்தார். இதேபோல் முன்பு நடிகர் கமல் ஹாசன் காந்தியை கொன்ற கோட்சே குறித்து பேசிய கருத்து சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருந்தது.