பெரிய திரையில் ஹீரோவாகிறார் நீயா நானா கோபி !

விஜய் டிவியிலிருந்து சந்தானம், சிவகார்த்திகேயன், கவின், ரியோ இவர்களை தொடர்ந்து நீயா நானா கோபியும் பெரிய திரையில் ஹீரோவாகி இருக்கிறார். நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோபி 'இது எல்லாத்துக்கும் மேல' என்ற படம் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். இந்த படத்தை விஜயகாந்த் நடித்த கண்ணு பட போகுதையா படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இயக்குகிறார். குழந்தைகளை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் பல குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.