Cine Bits
பேசியே கமல்ஹாசன் அதிக ஓட்டு வாங்குவார் – கஸ்தூரி கணிப்பு !
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. அவர் ஒரு இந்து என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பதட்டம் நிலவி வருகிறது. கமல் 30 வினாடிகள் பேசியதை 3 நாளாக பேசிக்கொண்டு இருக்கிறோம். பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினவர்கள் இப்போது கமல் பேசியதை நாடு முழுக்க பிரபலப்படுத்தி விட்டார்கள். இதைவிட ஒரு சூப்பர் பிரசாரம் அவருக்கு அமையுமா? இந்த 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே அவர் ஓட்டு வாங்குவார் பாருங்கள் என கூறியுள்ளார்.