பேசும்படியான​ கதாபாத்திரங்களை கேட்கும் ரம்யா கிருஷ்ணன்!

ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் எதிர்பார்த்தபடி வேடங்கள் அமையாததால் சின்னத்திரையில் சீரியல்கள் தயாரித்து நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன்,தற்போது வம்சம் என்ற சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சினிமாவிலும் அவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் சீரியலில் தனது கதாபாத்திரத்தை குறைத்து மற்ற நடிகைகள் பக்கம் கதையை திருப்பி விட்டு, சினிமா பக்கம் கூடுதல் கவனத்தை திருப்பியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

அந்த வகையில், படையப்பாவிற்கு பிறகு ரஜினியுடன் 2.ஓ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அவர்,அதேபோல் பஞ்சதந்திரம் படத்திற்கு பிறகு கமலுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களிலுமே அவருக்கு பேசப்படும் வேடங்கள்தானாம். இதற்கிடையே பாகுபலியைத் தொடர்ந்து பாகுபலி-2விலும் நடித்து வரும் ரம்யாகிருஷ்ணனை தேடி மேலும் சில படங்கள் சென்றபோது, அந்த படங்களில் பேசும்படியான​ வேடங்கள் இல்லை என்பதால் நடிக்க மறுத்து விட்டாராம். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல், சில கதாபாத்திரங்களை மேற்கோள் காட்டி இந்த மாதிரி வேடங்கள் இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன். அப்படி இல்லையேல் தேவையில்லை என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டாராம்.