பேட்ட 50வது நாள் விழா கொண்டாட்டம் – கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி!

ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இந்த விழாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷ், பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.