“பேட் மேன்” மூன்று நாளில் ரூ.40.05 கோடி வசூலித்து சாதனை…

பால்கி இயக்கிய “பேட் மேன்” படத்தில் அக்ஷய்,ராதிகா ஆப்தே, சோனம் கபூர் முதன்மை ரோலில் நடித்துள்ளார். இந்த படம் “மாதவிடாய்” பிரச்சனையின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து கொடுத்த தமிழரான அருணாச்சலம் முருகானந்தனின் வாழ்க்கையே பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட கதை. இதில் அருணாச்சலம் முருகானந்தம் ரோலில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.இந்த படம் இந்தியா முழுக்க 2750 திரையரங்கில் வெளியான முதல் நாளே ரூ.10.26 கோடி வசூலித்தது. அதுமட்டுமின்றி மூன்றே  நாளில்  ரூ.40.05 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்த படம் ரூ. 70 கோடி பட்ஜெட்டில் தயாரானது. தற்போது இந்த படம் இந்த வாரம் முடிவில் அசலை கடந்து லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.