‘பேய் மாமாவாக மாறினார் வடிவேலு!

காமெடியனாக நடிக்கும்போது வருடத்துக்கு பத்து முதல் பதினைந்து படங்கள் வரை நடித்துக்கொண்டிருந்த காமெடியன் வடிவேலு சோலோ ஹீரோவாக நடிக்கத்துவங்கி படங்களைக் குறைத்துக்கொண்டார். கடந்த நான்கைந்து வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்த நகைச்சுவைப் புயல் வடிவேலு ‘பேய் மாமா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் முழுமூச்சாகக் களம் இறங்கவிருப்பதாக செய்திகள் நடமாடுகின்றன. இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்குகிறார். இச்செய்தியை வடிவேலு தரப்போ, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தரப்போ ஆமோதிக்கவோ மறுக்கவோ இல்லை. கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளிவந்த பேய்ப்படமான ‘தில்லுக்கு துட்டு 2’ செம துட்டுப் பார்த்த படம் என்பதால் வடிவேலுவுக்கும் பேய்ப்படம் பண்ணும் ஆசை வந்திருக்கலாம்.