பேய் வேடத்தில் பிரபுதேவா!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து 2016-ல் திரைக்கு வந்த தேவி பேய் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் தமன்னா பேயாக நடித்து இருந்தார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தேவி-2 என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர். இதன் டிரெய்லர் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரெய்லரில் பிரபுதேவா பேயாக வரும் காட்சிகள் உள்ளன. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களை பயமுறுத்தும் என்கின்றனர்.