பைக் விபத்தில் உயிர் தப்பிய ஸ்ரீபிரியங்கா

ஸ்ரீபிரியங்கா வளர்ந்து வரும் திறமை உள்ள நடிகை என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். இவர் ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தில் பெண் போலீசாக நடித்து இருக்கிறார். தற்போது ‘கங்கனம்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக ஸ்ரீபிரியங்கா பைக் ஓட்டுவதுபோன்ற காட்சியை படமாக்கினர். முன்னால் ஒரு கார் செல்ல அதன் பின்னால் ஸ்ரீபிரியங்கா வேகமாக பைக் ஓட்டி செல்வதுபோல் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கார் நின்றுவிட்டது. இதனால் பின்னால் பைக்கில் வந்த ஸ்ரீபிரியங்கா பைக் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார். இதை பார்த்து படக்குழுவினர் பதறினர். காரில் மோதாமல் நிறுத்த முயன்று பைக்கோடு கீழே விழுந்தார். இதில் ஸ்ரீபிரியங்கா காயம் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.