பைனான்சியர் மீது ஸ்ரீரெட்டி புகார்!

தெலுங்கு திரையுலகில் பலர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீரெட்டி சென்னையில் தங்கி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நள்ளிரவில் வீடு புகுந்து பைனான்சியர் சுப்பிரமணி தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். ஸ்ரீரெட்டி தற்போது ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி இரவு 11 மணிக்கு வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுப்பிரமணி தனது ஆடையை பிடித்து இழுத்ததாகவும், தகாத முறையில் நடந்ததாகவும்   தெரிவித்துள்ளார். ரெட்டி டைரி படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியர் சுப்பிரமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட நான் தான் காரணம் என்று நினைத்து சுப்பிரமணி என்னை தாக்கியுள்ளார் என்கிறார் ஸ்ரீரெட்டி.