‘பைரவா’ டீசர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு

பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பைரவா' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தீபாவளி விருந்தாக இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளதோடு இதுகுறித்து புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் 28ஆம் தேதி அதிகாலை 12.01க்கு இணையதளத்திலும் மறுநாள் தீபாவளி முதல் வெள்ளித்திரையிலும் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.