பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படப்பிடிப்பு நிறைவு !

‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. அவருடைய 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை – ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி. ஏப்ரல் 8 அன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். சூரரைப் போற்று, பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.