“பொதுவாக என் மனசு தங்கம்” படத்தின் பர்ஸ்ட் லுக்

சரவணன் இருக்க பயமேன் படத்தை அடுத்து இப்படை வெல்லும், பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் உதயநிதி. பொதுவாக என் மனசு தங்கம் படத்தை, இயக்குனர்கள் விக்ரமன், பொன்ராம் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய தளபதி பிரபு இயக்கியுள்ளார்.உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக, நிவேதா பெதுராஜ்  நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் முதன் முதலாக உதயநிதி ஸ்டாலினுடன் பார்த்திபனும் இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முறுக்கு மீசை என பக்கா கிராமத்து ரோலில் இருக்கிறார் உதயநிதி. கூடவே இன்னொரு போட்டோவில் உதயநிதி ஸ்டாலின், காலில் செருப்பு அணியாமல் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை தலையில் சுமந்து கொண்டு வருவது போல் இருக்கிறார்.