பொது மேடையில் ரஜினி ரசிகர்களை கோமாளிகள் எனத் திட்டிய சிவகுமார் !

பிரபலங்கள் பொது இடங்களுக்கு வரும்போது அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுவது சகஜமான விசயம் தான். இருந்தாலும், தன்னிடம் ஒரு ரசிகர் செல்பி எடுக்க வந்தபோது அந்த செல்போனை தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கியவர், நடிகர் சிவக்குமார். பின்னர் அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதோடு, அந்த இளைஞருக்கு செல்போனும் வாங்கி தந்தார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கதாசிரியர் கலைஞானத்துக்கு கலைவாணர் அரங்கில் விழா நடந்தபோது, ரஜினியை பெருமையாக பேசினார் சிவகுமார். ஆனால் அவர் ரஜினியை பற்றி பேசும்போதெல்லாம் அங்கு கூடியிருந்த ரஜினியின் ரசிகர்கள் கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தார்கள். இதனால் ஒரு கட்டத்தில் சிவகுமார், நான் பேசுறத முதல்ல கேளுங்க. கேட்டுட்டு கடைசியில கைதட்டுங்க கோமாளிங்களா…. என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.