பொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய் !

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கும் முணைப்பில் உள்ளார். இப்படத்தை சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கும் முணைப்பில் உள்ளார். இப்படத்தை சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜஸ்வர்யா ராஸ் நடிப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில் சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராய், “பொன்னியின் செல்வன் படத்தில் நான் நடிப்பது உண்மை தான். அவரோடு இந்த படத்தில் பயணிப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் அவர் எனக்கு எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அது எனக்கு பெருமை தான். மற்றப்படி இந்த படம் குறித்து மணிரத்னம் சார் தான் பேச வேண்டும். அவருடைய அனுமதி இல்லாமல் இந்த படம் குறித்து நான் பேசுவது நியாயமாக இருக்காது. அவர் என்னுடைய குருநாதர். எனவே அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு, என்றார்.