பொன்னியின் செல்வன் கதையில் விஜய் சேதுபதி!

செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக தனது நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவியை வைத்து மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தேதி பிரச்சனையால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது. அனால் இந்த செய்தியை படக்குழுவினர் மறுத்தனர் மேலும், இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆவலோடு இருப்பதாகவும், இந்த படத்துக்காக மொத்தமாக தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தனர். கூடியவிரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.