பொன்னியின் செல்வன் படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் இணைகிறார அதிகாரபூர்வ அறிவிப்பு !

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. வந்தியத்தேவனாக கார்த்தி அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி பூங்குழலியாக நயன்தாரா சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆதித்த கரிகாலனாக விக்ரம் குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய் பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அமலாபால் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யாராய் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று அவர் கூறினார். தற்போது பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதை ஜெயராம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.